| 245 |
: |
_ _ |a திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a தென்திருமுல்லைவாசல் |
| 520 |
: |
_ _ |a திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் தென்திருமுல்லைவாயில் எனவும் அழைக்கப்பெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 7-வது தலம் ஆகும். |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழ்நாட்டு சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், சிவன் கோயில், தென்திருமுல்லைவாசல், திருமுல்லைவாசல், முல்லைவனநாதர், யூதிகாபரமேஸ்வரர், அணி கொண்ட கோதை, சீர்காழி வட்டம், நாகப்பட்டினம், சம்பந்தர், திருமுறைத்தலம் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 902 |
: |
_ _ |a 94863 39538 |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். |
| 914 |
: |
_ _ |a 11.241857 |
| 915 |
: |
_ _ |a 79.840146 |
| 918 |
: |
_ _ |a அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி |
| 922 |
: |
_ _ |a முல்லை |
| 923 |
: |
_ _ |a பிரம்ம தீர்த்தம், சந்திர தீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இக்கோயிலின் இறைவன் முல்லைவனநாதர் மூன்றரை அடி உயரத்தில் இலிங்க வடிவில் உள்ளார். உள் சுற்றில் வரசக்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முக சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், திருஞானசம்பந்தர் ஆகிய திருவுருவ திருமுன்கள் உள்ளன. தென்முகக்கடவுள் கலைப்படைப்பு சோழர்களின் சிற்பக்கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. |
| 930 |
: |
_ _ |a பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால் இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம். முதலாம் கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூற, அதன்படி இத்தலத்தற்கு அருகிலுள்ள கடலில் நோய் தீருவதற்காக தன் பரிவாரங்களுடன் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த மன்னன் ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. மன்னன் தன் தவறுணர்ந்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயல்கையில் இறைவன் ரிஷபாரூடராய்க் காடசி தந்ததாகத் தல வரலாறு கூறுகிறது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம். இத்தலத்தில் வாயு திசையிலுள்ள கிணற்றில் கங்கை நித்திய வாசம் செய்கிறாள். அக்னி திசையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த் நோயைப் போக்கிக் கொண்ட தலம் இதுவாகும். |
| 932 |
: |
_ _ |a திருமுல்லைவாசல் ஒரு கடற்கரைத் தலம். உப்பனாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபத்தைக் காணலாம். ஒரு திருச்சுற்றுடன் விளங்கும் இத்திருக்கோயில் கருவறை விமானம் கீழே சதுர வடிவக்கருவறையாக மூலவர் வழிபாட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் தனி திருமுன் கொண்டு விளங்குகிறார். முருகன், கணபதி ஆகிய கடவுளருக்கான தனி சிறு கருவறைகள் திருச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ளன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a சீர்காழி பிரமாபுரம் |
| 935 |
: |
_ _ |a சீர்காழியில் இருந்து 14 கி. மி. தொலைவில் வங்கக் கடலோரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| 936 |
: |
_ _ |a காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a திருமுல்லைவாசல் |
| 938 |
: |
_ _ |a சீர்காழி |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a சீர்காழி வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000334 |
| barcode |
: |
TVA_TEM_000334 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000334/TVA_TEM_000334_திருமுல்லைவாசல்_முல்லைவனநாதர்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000334/TVA_TEM_000334_திருமுல்லைவாசல்_முல்லைவனநாதர்-கோயில்-0001.jpg
TVA_TEM_000334/TVA_TEM_000334_திருமுல்லைவாசல்_முல்லைவனநாதர்-கோயில்-0002.jpg
TVA_TEM_000334/TVA_TEM_000334_திருமுல்லைவாசல்_முல்லைவனநாதர்-கோயில்-0003.jpg
TVA_TEM_000334/TVA_TEM_000334_திருமுல்லைவாசல்_முல்லைவனநாதர்-கோயில்-0004.jpg
TVA_TEM_000334/TVA_TEM_000334_திருமுல்லைவாசல்_முல்லைவனநாதர்-கோயில்-0005.jpg
TVA_TEM_000334/TVA_TEM_000334_திருமுல்லைவாசல்_முல்லைவனநாதர்-கோயில்-0006.jpg
TVA_TEM_000334/TVA_TEM_000334_திருமுல்லைவாசல்_முல்லைவனநாதர்-கோயில்-0007.jpg
|